logo
வாழ்க வளமுடன்

Thamirabarani MKVM

9876543210
tirunelvelimvkm118@gmail.com

Transform your life with health, peace, happiness, and prosperity through the SKY Yoga [Simplified Kundalini] system, developed by Shri Vethathiri Maharishi. A spiritual leader, Shri Vethathiri Maharishi created this system after years of intense meditation, yogic practices, research, and spiritual realizations.

Simplified
Exercises

எளியமுறை உடற்ப்யிற்சிகள்

Simplified
Meditation

எளியமுறை குண்டலினி தியான பயிற்சிகள்

Kayakalpa
Yoga

காயகல்ப
பயிற்சி

Introspection
Techniques

அகத்தாய்வு
பயிற்சிகள்

About Our Centre

திருநெல்வேலி மனவளக்கலை மன்றம் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால் 1996 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு  நேரடியாக வருகைத் தந்து மக்கள் பணிக்கு அர்பணிக்கப்பட்ட அறிவியல் வழி ஆன்மீக பயிற்சி மையமாகும்.

திருநெல்வேலி மண் தனித்துவமான ஆன்மிக அடையாளம் பெற்றது. சைவமும் பக்தியும் தழைத்து ஓங்கிய இம்மண்ணில் மேலும் ஒரு  ஆற்றல் களமாக  மனவளக்கலை பயிற்சிகள்  அமைய வேண்டும் என்று விரும்பிய யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நேரடியாக இந்த இடத்தை தேர்வு செய்து  ஆன்மிக விதையை 1996 ஆம் ஆண்டு ஊன்றினார்.

ஆரம்பநிலையில்  திருநெல்வேலி நகரத்தில் உள்ள மக்களுக்கு மனவளக்கலை போதிக்கும் பள்ளியாக உருவெடுத்த திருநெல்வேலி மனவளக்கலை மன்றம் படிப்படியாக ஆன்மீக பங்கேற்பாளர்களின்  உதவியுடன் உருப்பெற்று இன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமான பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்,காவல்துறையினர், சிறைச்சாலிகள் உட்பட  பல்வேறு அமைப்புகளுக்கு மனவளக்கலையை போதித்து வருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 2000 சாதகர்கள் இங்கிருந்து பயிற்சி பெற்று செல்கிறார்கள். திருநெல்வேலி மனவளக்கலை மன்றத்தில் தீட்சை பெற்று ஆன்மீக சாதகத்தை தொடர்பவர்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாக இருக்கின்றனர்.

இங்கு மனவளக்கலையின் கீழ்காணும் பயிற்சி முறைகள் நேரடியாகவும் தேவைக்கு ஏற்ப இணைய வழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இது தவிர  மனவளக்கலை பயிற்சிகள் சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளாகவும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு ஆழியாறு ஆசிரமத்தின் கிளை மையமாகவும் செயல்பட்டு வருகிறது. . மனிதவள மேம்பாட்டுத்துறையில் ஆன்மீக தேவையை உணர்ந்து அதற்கு ஏற்ப இந்த பல்கலைக்கழக படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முறையான பல்கலைக்கழக சான்றிதழுடன் மனவளக்கலையை படிக்க விரும்புவர்கள் இப்படிப்பு வழங்கப்படும்  விருப்பம்கொண்ட் பல்கலைக்கழகங்கள் மூலம் கற்று தகுதி பெறலாம்.

திருநெல்வேலி மனவளக்கலை மன்றம மூலம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி, தென்காசி, கேரளாவின் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், காவல்துறை, மருத்துவத்துறை, கல்லூரிகள், சிறைத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள்,தனியார் தொழிற்சாலைகள் என பல்வேறு களங்களில் அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அங்கேயே சென்று தனிப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Courses Offered

Foundation Course

An effective package of Simple Physical Exercises is designed to regulate the flow of blood, heat, air and life force in the body leading to good physical health.

Simplified Kundalini Yoga

A systematic training of mind to bring about tranquility, increased sense of awareness, clarity and strengthening of mind.

Kayakalpa Yoga

It is a practice devised by 'Siddhas', the wise ancestral sages, to intensify the vital energy and thus enhance the quality of life.

Introspection

Master your emotions! Discover a practical approach to redirect negativity like anger, worry, and vengeful urges into healthy and productive outlets.

வேதாத்திரியம்

ஒவ்வொரு தனிமனிதரும் மகிழ்ச்சியாகவும்  நிறைவாகவும் வாழ விரும்புகிறோம். அதற்கான முயற்சியே முழுமையான மனிதவாழ்வு. மனிதவாழ்க்கையில் இத்தகைய தன்னிறைவை தருவது ஆன்மீகம். ஆன்மீகத்தின் வடிவங்கள் பக்தியோகம், ராஜயோகம், கர்மயோகம், ஞானயோகம் என்று பல வடிவங்களில் இருக்கிறது. அதில் மிகவும் உன்னதமான  யோகநிலை ஞானயோகம். முந்தைய மூன்று நிலைகளின் உண்மைதன்மையை விளக்கி அறிவால்  வாழ்க்கையில் தன்னிறைவையும் தன்னிலையையும் அறிந்துகொள்ள செய்யும் விஞ்ஞானமே ஞானயோகம்.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் யோகிகளில் முதன்மையானவர்  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரியில் ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, மனித வாழ்க்கையின் உயர்வு தாழ்வு என அனைத்தையும் பார்த்து ஆன்மிக மார்க்கத்தில் ஈர்க்கப்பட்டு , அதுகுறித்து ஆய்வு செய்து பின்னர் எளிய மக்களின் தத்துவஞானியாக உயர்ந்தவர்.

மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக பள்ளிக்கு சென்று படித்திருந்ததாலும்  நூற்றாண்டுக்கு முன்பே கல்வியின் மகத்துவம் உணர்ந்து சுயமுயற்சியால்  ஆங்கிலம்  படிக்க கற்று தேர்ந்துகொண்டார். பின்னர் அவசரகால முதலுதவி பயிற்சி, நவீன மருத்துவப்படிப்புகள் வரும் முன்பே அந்த காலத்தில் சித்தமருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ஆகிய துறைகளில் கற்று தேர்ந்து அத்துறைகளில் பணியாற்ற அரசு தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்.  இரண்டாம் உலக போரில் பணியாற்றியவர். ஒரு குழந்தை தொழிலாளியாக வறுமையின் காரணமாக இளம் பாலகனாக நெசவுத்தொழிலுக்குள் தள்ளப்பட்டாலும் சுயமுயற்சியால் முன்னேறி  பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான தறிகளுக்கு சொந்தகாரராகி அதன் மூலம் எளிய மக்களுக்கு வேலைவாய்ப்புகள், பொருளாதார தன்னிறைவை வழங்கியவர். ஒரே நிகழ்வில் அத்தனை சொகுசுகளையும் இழந்து மனிதவாழ்க்கையின் மேம்பாட்டிற்கு வழிகாட்டவேண்டும் என்ற இறை உந்துதுதலுடன்  “ உலக சமுதாய சேவா சங்கம்” என்ற அமைப்பை  70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி அதன் மூலம் மனவளக்கலை என்ற மகத்தான பயிற்சி முறையை உருவாக்கி பாமர மக்களுக்கு போதிக்க தொடங்கினார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும், மலேயா, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளுக்கு பயணித்து “ அறிவே தெய்வம்”  அதனை எளிமையான தன்னிலை விளக்க பயிற்சியின் மூலம் உணரமுடியும் என்று போதித்தவர்.

Study While Work, Gender Equality, Law of Attraction, Power of Blessing, Power of Gifting, Spiritual Engineering  என்றெல்லாம் பலவகைகளில் இன்று விவாதிக்கப்படும் வாழ்வியல் தத்துவங்களை Corporate Management Skills  களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தாயுமானவர், திருமூலர், திருவள்ளுவர், அருட்பிரகாச வள்ளலார் ஆகியோரின் தத்துவங்களில் இருந்து எடுத்து எளிமைப்படுத்தி அதனை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் வழங்கியவர். அவரின் இந்த போதனைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வேதாத்திரியம் என்று வழங்கப்படுகிறது.

நான் எனது வாழ்நாளில் பிறிதொரு உயிருக்கு உடலாலோ மனதளாலோ துன்பம் தரமாட்டேன்.

துன்பப்படும் உயிர்களுக்கு என்னால்  இயன்ற உதவிகளை செய்வேன்

தனி மனித அமைதி மூலமே  குடும்ப அமைதி சாத்தியப்படும்.

குடும்ப அமைதியின் மூலமே சமூக அமைதியும் அதன் வழியே உலக அமைதியும் சாத்தியப்படும்

வேதாத்திரியம் முழுக்க முழுக்க சடங்குகள், சம்பிரதாயமற்ற எந்தவிதமான மத அடையாளமும் அற்ற முழுமையான அறிவியல் பூர்வமாக பயிற்றுவிக்கப்படும் பயிற்சி முறையாகும். 8 வயதுக்கு மேற்பட்ட ஆண் /பெண் / திருநர் / திருநங்கை என அனைவரும்  கற்றுகொள்ள ஏதுவான பயிற்சியாகும்.

Thamirabarani

Temple of Consciouness

ABOUT

துரியசபை

மனித இயக்கம் உடல்  உயிர் மனம் என்ற மூன்று இயக்கங்கள் அடிப்படையில் இயங்குகின்றன.

உடலுக்கு உடற்பயிற்சி. மனதுக்கு தியானப்பயிற்சி.  உடல் நலன் மற்றும் மனநலனோடு நல்லியல்பை தொடரும் போது நமது உயிர் பரிபூரண தூய்மையும் உயர்வையும் அடையும். இதனை மேலும் மெருகேற்ற காயகல்ப பயிற்சி எனும் அற்புத பயிற்சி முறை உறுதுணை புரியும்.

உடலில் உருவாகும் ஆற்றல் சீவகாந்தம் எனப்படும். இந்த ஆற்றல் உருவாக உதவுவது வான்காந்தம்.அதாவது  Universal Magnetism. உடலின் இயக்கம் சீராக இருக்கும் போதுதான் இந்த வான்காந்தம் சிறப்பாக நம் உடலில் ஊடுருவும். இதற்கு நமது உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், உயிர் ஓட்டம், காற்று ஓட்டம் என நான்கு விதமான ஓட்டங்கள் சீராக இருக்கவேண்டும். இது தவிர  நமது உடலில் சுரப்பிகள் எனப்படும்  பிட்யூட்டரி, பீனியல், தைமஸ், பாரா தைமஸ் ஆகியவை தடையின்றி இயங்கவேண்டும். இதில் சுணக்கம் ஏற்படும் போது நாம் சோர்வையும் உடல்நலக்குறைவையும் உணர்கிறோம். இது தொடரும் போது உடனடியாக நமக்கு பிடித்தமான வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறோம். அங்கு இயல்பாகவே வான்காந்த ஈர்ப்பை அதிகமாக தக்கவைத்து நமக்கு தரும் வகையில் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதால் அங்கு நாம் ஆற்றல் பெருகிறோம்.

இந்த ஆற்றலை ஈர்த்து தருவதில் பிரமிட் வடிவிலான அமைப்புகள் மிகவும் சக்தியுடன் இயங்குகின்றன. வழிப்பாட்டு தலங்களின் அமைப்பு இதனையொத்த ஒன்றாக இருப்பதை இதன் மூலம் உணரமுடியும். இத்தகையை வான்காந்த ஆற்றலை ஈர்த்து தரும் வகையில் ஒரு அமைப்பு இருந்தால் ஆன்மீக சாகதத்திற்கு உதவும் என்ற எண்ணமுடன், அது எந்தவிதமான மத அடையாளமும் இன்றி வான்காந்த ஆற்றலை ஈர்க்க விரும்பும் அனைவருக்கும் உதவும் நோக்கமுடன் தாமிரபரணி ஆசிரம வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு தியான மண்டப அமைபே துரியசபை என்று அழைக்கப்பட்டுகிறது.

பிரமிட் வடிவில் செம்பு உலோக தகடுகளால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு சக்தி வாய்ந்த யோக அப்பியாசிகளால்  உருவாக்கப்பட்டு தொடர் தியான பயிற்சிகளால் மேலும் மேலும் ஆற்றலை ஈர்த்து தக்கவைக்கப்பட்டுகொண்டே வருகிறது.

வார இறுதி நாட்கள், பெளர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் பஞ்சபூத நவக்கிர தவம் எனும் இயற்கைவழி பெளதீக அறிவு தியானப்பயிற்சிகள் இங்கு நடைபெறும். எளியமுறை உடற்பயிற்சிகள் மற்றும்  பஞ்சபூத தியான பயிற்சிகளில் சாதி மத அடையாளம் தவிர்த்து அறிவின் வழியே இறைநிலை உணரவிரும்பு அனைவருக்கும் இந்த துரியசபை ஒரு வரபிரசாதமாகும்.

Thathvagnani

Vethathiri Maharishi

We all crave happiness, and nature provides everything we need to thrive. Science has made our lives easier, but we still face stress, disharmony, and illness.

Thathvagnani Vethathiri Maharishi identified the root cause: a lack of self-understanding. This can lead to actions that harm ourselves and others.

Through the Simplified Kundalini Yoga (SKY) system, Maharishi developed methods to unlock our potential for mental clarity, vitality, and inner peace. SKY Yoga can empower you to transform your life and experience the health, prosperity, and joy you deserve.

Scan QR Code for Donation

Donate Now

Share the gift of peace and well-being. Make a donation in honor of a loved one and receive a special message from Vethathiri Maharishi.

ABOUT

Our centre

தங்குமிடம்

வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை அன்பர்களின் வசதிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒன்று. பணியில் இருப்போர் வார இறுதிகளில் மற்றும் விடுமுறை நாட்களில்  தாமிரபரணி ஆசிரமம் வந்து தங்கி பயிற்சி பெறும் வகையில் இங்கு தங்கும் வசதியுடன் கூடிய  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆண் / பெண் இருபாலரும் பாதுகாப்புடன் தங்கும் வகையில் சுகாதாரமான வசதிகளுடன் 20 படுக்கைகளுடன் கூடிய டார்மெட்டரி அறைகள் ஆசிரமத்துடன் இணைந்து செயல்படுகின்றன. இங்கு வரும் அன்பர்களுக்கு தேனீர், மாலை சிற்றுண்டி, மூன்று வேளை சைவ உணவுடனுடன் கூடிய சுவையான நெல்லை புகழ் சைவ சமையல் கூடமும் இங்கு அன்பர்களின் தேவைக்கு ஏற்ப இயங்குகின்றன.

20  முதல் 50 நபர்கள் வரை குழுவாக வந்து தங்கி பயிற்சிகள் எடுக்க அனைத்து வசதிகளும் இங்கு அமைந்துள்ளது.

பயணம்

திருநெல்வேலி  இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எளிய முறையில் ரயில், பேருந்து, விமானம் ஆகிய போக்குரவத்தில் இணைப்பு பெற்ற நகரம்.  மதுரை சர்வதேச விமானநிலையம் 150 கிலோ மீட்டர் தூரம், தூத்துகுடி துறைமுகம் மற்றும் விமான நிலையம் 50 கிலோ மீட்டர்

ஆன்மிக சுற்றுலா

அன்பர்களின் விருப்பத்தின் பேரில் மனவளக்கலை பயிற்சி முறைகளோடு திருச்செந்தூர்,குற்றாலம், தென்காசி, கன்னியாகுமர் ஆகிய சுற்றுலா இடங்களுக்கு Spiritual Tourism  ஏற்பாடுகளும் செய்து தரப்படுகின்றன

தொடர்புக்கு

Centre Name

தாமிரபரணி மனவளக்கலை மன்றம்

Phone Number

999999999

E-Mail

tirunelvelimvkm118@gmail.com

Address

94 சேரன் மாதேவி ரோடு பேட்டை திருநெல்வேலி - 627004

வாழ்க வளமுடன்
Powered By WCSC - Digital Solutions

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் நெடிய ஆய்வுக்கு பின்னர் இந்த எளியமுறை யோகபயிற்சிகள் அனைத்து தரப்பினராலும் எளியமுறையில் செய்யும் வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது. கைப்பயிற்சிகள், கால்பயிற்சிகள், கண் பயிற்சிகள், மூச்சுபயிற்சிகள், மகராசனப்பயிற்சிகள், அக்குபிரஷர், உடல்தளர்த்தல் என்று 9 வகை பயிற்சிகள் இதில் அடங்கும். இப்பயிற்சிகள் முறையாக செய்துமுடிக்க நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் ஆகும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதினால் நோயற்ற வாழ்வு உறுதி செய்யப்படுவோதோடு ஏற்கனவே இருக்கும் நோயின் தன்மை குறைந்துகொண்டே வரும். இப்பயிற்சியை பல ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியின் அறுவைசிகிச்சை நிபுணராக இருந்த டாக்டர் வெங்கடநாராயணன் ஆராய்ச்சி செய்து இது மனிதவாழ்வின் அற்புதம் என்று சான்றளித்துள்ளார். இதன் பலன்களை தொடர்ந்து வேதாத்திரி மகரிஷி குண்டலினியோக ஆராய்ச்சி மையமும் ஆய்வு செய்து பல ஆரோக்கிய முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

தியான முறைகளின் அதீத சக்தி வாய்ந்தது எளியமுறை குண்டலினி தியானம் . ஏனைய தியானங்கள் அனைத்தும் ராஜயோக வழிமுறைகளை கொண்டது. வாசி அடிப்படையிலானது. அதாவது  மூச்சு சுவாசத்தை கவனிப்பது, ஒலி, ஒளியை கவனிப்பது இப்படி பல வழிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. குண்டலின் யோகம் இதற்கு எல்லாம் மேம்பட்ட நிலையில் நமது உயிர்சக்தியை உணர்வது. பயிற்சி பெற்ற குண்டலினி யோக ஆசிரியர் நமது உடலில் இயங்கும் குண்டலின் சக்தியை அடையாளம் கண்டு அதனை நமக்கு உணர்த்தி அதனை கவனிக்க செய்வார். இது மிக மிக அரிய மற்றும் எளிய பயிற்சி. இது ஆரம்ப நிலை ஆக்கிணை தியானம், இரண்டாவது நிலை சாந்தியோகம் என்று போதிக்கப்படுகிறது. இத்துடன் மேலும் மேம்பட்ட உயரிய நிலைகள் ஒன்பது மையம்,

காயகல்பம் என்பதை மருந்தாக கருதி சில இடங்களில் இப்பெயர்களில் சில விற்கப்படுகின்றது. ஆனால் இது ஒரு ஆன்மீக பயிற்சி என்பதை அற்புதமாக வடிவமைத்து எளியமுறையில் கற்பித்தார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. வேதாத்திரியத்தின் உடற்பயிற்சிகளில் அற்புதமானது தனித்துவமானது இந்த காயகல்ப பயிற்சி. உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர்.  திருமூலர், சிவவாக்கியர், ஒளவையார் என பெரும் தமிழ் பெருமக்கள் இந்த காயகல்ப பயிற்சி பற்றி பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். என்று இளைஞரை போன்று சுறுசுறுப்பாக இருக்கவும், அறுபதிலும் இருபதை போன்று ஆரோக்கியம் காக்கவும் இந்த காயகல்ப பயிற்சி உதவுகிறது. முறைப்படி பயின்றால் காலை மாலை இருவேளை 3 நிமிடத்தில் இப்பயிற்சியை முடித்துவிடும் அளவிற்கு அத்தனை சுலபமானது. 14 வயதுக்கு மேற்பட்ட  யாவரும் இப்பயிற்சியை கற்றுகொண்டு தினமும் செய்து பலன் பெறலாம்.

அகத்தை ஆய்வு செய்து நமது மனதில் ஏற்படும் கசடுகளை நீக்கும் உளவியல் சார்ந்த தற்சோதனை முறையே  இந்த அகத்தாய்வு பயிற்சி. இருண்டு கிடக்கும் வீட்டில் ஏற்றப்படும் ஒரு அகல விளக்கு எப்படி அந்த வீடு முழுவதும் ஒளிப்பாய்ச்சுகிறதோ அதை போன்று அகத்தாய்வு என்ற தற்சோதனை மூலம் நம்முள் நிறைந்துகிடக்கும் இருட்டுபதிவுகளை கண்டறிந்து அதனை களைந்து அதற்குள் ஒளியேற்றி அதன் மூலம் நம்மை நமது வாழ்வில் பிரகாசிக்க செய்யும் பயிற்சி அகத்தாய்வு.  முந்தையை தியானம், உடற்பயிற்சிகளைவிட மிகவும் உயர்ந்தது இந்த தற்சோதனை பயிற்சி. ஏன் எனில் பயிற்சி இல்லாத தியானம்  கட்டுபாடற்ற நெருப்பை போன்றது. தற்சோதனையுடனான பயிற்சி கொண்ட தியானம் மட்டுமே பயனுள்ள  அகல்விளக்கை போன்று கட்டுபாட்டுடன் முறையாக இயக்கவல்லது.  இரண்டு நிலைகளில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இன்று நவீன உலகில் Life Coaching  என்ற பெயரில் உயர் சொகுசு விடுதிகளில் போதிக்கப்படும் அனைத்து நுட்பங்களுக்கு நிகரானது மட்டுமல்ல இப்பயிற்சி உங்களின் ஈர்ப்பு விதியை ( Law of attraction ) பன்மடங்கு அதிகரித்து உதவ கூடியது.

Start your Kundalini Journey Now!

Discover the Ancident Siddha Technique
Kundalini & Kayakalpa Yoga

Elixir for Anti-ageing | Youthfulness | Balancing of Hormones & Building Immunity | Harnesses your life energy and Unleashes your hidden potential.