Currently Empty: ₹0.00
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால் உலகுக்கு வழங்கப்பட்ட கொடை உலக சமுதாய சேவா சங்கம்.
அருட்தந்தை அவர்கள் உலகுக்கு வழங்கிய மனவளக்கலை யோகா எனும் வாழ்க்கை கல்வியை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்காக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அறிவுத் திருக்கோவில்கள், அறக்கட்டளைகள், தவமையங்கள் துவங்கப்பட்டு, நமது உலக சமுதாய சேவா சங்க தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொண்டாற்றி வருகின்றன.
அறிவுத் திருக்கோவில்கள், அறக்கட்டளைகள், தவமையங்கள் நடத்துகின்ற நிகழ்வுகள், விழாக்கள் இவை பற்றிய விவரங்களை புகைப்படத்துடன் இணைத்து அருமையான காணொளி ஒன்றை உலக சமுதாய சேவா சங்கம் - Digital Solutions இயக்குனரகம் உருவாக்கி " சுவடுகள் " ஒவ்வொரு வாரமும் வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறது.
அறக்கட்டளைகள் தங்களது மன்ற நிகழ்வுகளின் காணொளிகளை சமூக வலைத் தளங்களில் share செய்வதன் மூலம் உலகமெங்கும் மனவளக்கலை யோகா பரவும். மேலும் அனைத்து அறக்கட்டளைகளும் புதிய புதிய முயற்சிகளை யோசனை செய்து மன்ற நிகழ்வுகளை நடத்தவும் , காணொளி மூலம் மனவளக்கலை யோகா உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும் ” சுவடுகள் ” உதவி செய்கிறது.
அறக்கட்டளைகளில் தவ மையங்களில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய விவரங்களை நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய முகவரி தொடர்பான விவரங்கள் கடிதம் மூலம் ஒவ்வொரு அறக்கட்டளைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
உங்களின் நினைவூட்டலுக்கு
Email ID
Phone Number
wcscds.suvadugal@gmail.com
Add Your Heading Text Here
இந்த அருமையான சிறப்பான ” சுவடுகள் எனும் புதிய முயற்சி வேதாத்திரியத்தை உலகமெங்கும் பரப்ப உதவி செய்யட்டும்.